Home > சினிமா > ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி காலமானார்

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி காலமானார்

டாக்டர் நோவில் கலக்கிய முதல் ஜேம்ஸ் பாண்ட்டும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகருமான சீன் கானரி காலமானார். அவருக்கு வயது 90

ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் படங்களில் முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரி இன்று காலமானார்.

டாக்டர் நோ, ஃபிரம் ரஷ்யா வித் லவ், கோல்ட் பிங்கர், தண்டர்பேர்டு, யூ ஒன்லி லைவ் டிவைஸ், டைமண்ட்ஸ் ஆர் பாரேவர் ஆகிய ஆறு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி காலமானார்

1988ஆம் வருடம் ‘The Untouchables’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். ஆஸ்கர் விருதை தவிர தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

சீன் கானரி யின் மறைவு குறித்து பதிவிட்ட அபிஷேக் பச்சன் “நாம் மற்றுமொரு ஆளுமையை இன்று இழந்துள்ளோம். ஹைலண்டர் படம் பார்த்ததுக்கு பிறகு அவர் எப்போதும் அழியாமல் இருப்பார் என்று நான் நம்பினேன்.

அவரது அற்புதமான பணிகளின் வழியாக அவர் நம்முடன் இருப்பார். உங்களை விட சிறந்த பாண்ட் இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்

You may also like
அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி
திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!
தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு
கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி மாற்றம்

Leave a Reply