Home > சினிமா > மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இன்று தீபாவளி தினத்தில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு சுவைத்து கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் திரைத்துறையினரும் ஏராளமான அப்டேட் வெளியிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர். ஏற்கனவே சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீசர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் தீபாவளி ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளன. மேலும் பல படத்தின் அப்டேட்-களும் வெளியாகியுள்ளன.

தற்போது மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் விஜய் போதைக்கு அடிமையான ப்ரொபசராக மிரட்டல் விடுகிறார். விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் வில்லன் கேங்க் ஆக வந்து மிரட்டுகின்றனர்.

கைதி படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே மாஸ்டர் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

You may also like
‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’
விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு விஜய் சேதுபதி நிதி உதவி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு விஜய் சேதுபதி நிதி உதவி…
நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா டுவிட்
சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்த, பிரபலங்களின் ட்வீட்

Leave a Reply