Home > சினிமா > ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெற்றுள்ளது மலையாள திரைத்துறைக்கே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

You may also like
விஜேந்தர் சிங்
வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் விருது ரிட்டர்ன்
விவசாயிகளுக்கு ஆதரவு….மத்திய அரசின் விருதை திருப்பிக் கொடுத்த முதல்வர்
பாரதிராஜாவுக்கு தாதாசாகிப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்

Leave a Reply