‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு “ராதே ஷ்யாம்” என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Prabhas20 is Titled as #RadheShyam
Here is the First look 🔥🔥🔥#Prabhas @hegdepooja @director_radhaa @UVKrishnamRaju @itsBhushanKumar @PraseedhaU @UV_Creations @TSeries @manojdft @SachinSKhedekar @priyadarshi_i @bhagyashree123 @murlisharma72 @RickshaRani @onlynikil pic.twitter.com/vCuSLnShkk
— Maalai Malar News (@maalaimalar) July 10, 2020