Home > சினிமா > சூரரைப் போற்று தயாரிப்பாளர் சூர்யாவுக்கு லாபம் 28 கோடி?

சூரரைப் போற்று தயாரிப்பாளர் சூர்யாவுக்கு லாபம் 28 கோடி?

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது.

அப்போதிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு, விவாதங்கள் நிலவி வருகிறது. சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதால் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமார் முப்பது கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறார் சூர்யா என்று சொல்லப்படுகிறது.

இதுபற்றி திரையுலகில் கூறப்படும் கணக்கு…..

சூரரைப்போற்று படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இணையதளத்தில் வெளீயிடுவதற்கான விலை சுமார் 35 கோடி,இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் 18 கோடி,
வெளிநாட்டு உரிமை 12 கோடி, பாடல் உரிமை 2 கோடி, இந்தி மொழிமாற்று உரிமை 12 கோடி என்று சொல்லப்படுகிறது.

இதன்படி மொத்தம் 79 கோடி என்றும், நேரடி இணைய ஒளிபரப்பு எனும் முடிவெடுக்கும்முன்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளது

அதனால் வெளிநாட்டு உரிமைக்கான 12 கோடி ரத்தாகும் எஞ்சிய மொத்த வியாபாரம் 67 கோடி எனலாம்.

இப்படத்துக்கான மொத்த செலவு சூர்யா சம்பளம் இல்லாமல் சுமார் 19 கோடி,.சூர்யா சம்பளம் 20 கோடி என்று வைத்துக் கொண்டால் மொத்தம் 39 கோடி ஆகிறது.

இந்தக்கணக்கின்படி இந்தப்படத்தின் மூலம் சூர்யா 28கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவ்வளவு இலாபம் கிடைக்கிறது என்பதாலேயே எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் இணையதளத்தில் படத்தை வெளியிட சூர்யா ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

You may also like
மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு குடும்பத்திற்கு உதவும் நடிகர் விஷால்
விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முறைகேடு குறித்து விளக்கம் கேட்கும் T .ராஜேந்தர்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியானது

Leave a Reply