Home > சினிமா > ரஜினிகாந்த் பிறந்த நாள்- நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் பிறந்த நாள்- நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் 71–வது பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அதனால், டுவிட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தொலைப்பேசி வழியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர் வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர்.

ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில், ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள உள்ளனர்.

You may also like
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
ரஜினி பிறந்தநாள் பரிசாக அண்ணாத்தே முதல் பார்வை?

Leave a Reply