Home > சினிமா > சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ரீமேக் படம்

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ரீமேக் படம்

தமிழில் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைத்த எல்லா படங்களிலுமே பாடல்கள் பிரபலமானது.

குறிப்பாக, சந்தோஷ் நாராயண் -பா.ரஞ்சித் ,மற்றும் சந்தோஷ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவான படங்களில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே ஹிட் அடித்தனஇந்நிலையில், ரீமேக் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா , தபு நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் அந்தாதூன். இந்தப் படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆயுஷ்மான்.

நெகட்டிவ் ரோலில் தபு நடித்திருப்பார்.  இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார் இந்தியில் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கிறார். படத்தில் தபு கேரக்டரில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தபுவுக்கு இந்தியில் நடித்தஅதே ரோலில் தான் சிம்ரன் நடிக்கிறார். ஆயுஷ்மான் ரோலில் பிரசாந்த் நடிக்கிறார்.

பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் கண்ணெதிரே தோன்றினால் , ஜோடி உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கான முதல்கட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தை ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஃபெட்ரிக் இயக்குகிறார். 

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். பொதுவாக நேரடி படங்களுக்கு இசையமைக்கும், இசையமைப்பாளர்கள் ரீமேக் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில் பிறமொழியில் ஹிட்டாகிவிட்டால், வேறு மொழிக்கு போகும் போது எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கும். புதிய பரிசோதனையாக இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

Leave a Reply