Home > சினிமா > பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்……

பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்……

சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி, மறைந்த பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக ‘என்ஜிகே’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சாய் பல்லவி மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் நடிக்க இருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப் படமான ‘மகாநதி’ மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்க தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்களாம்.

சௌந்தர்யாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து பல வதந்திகள் பரவி வரும் நிலையில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply