Home > சினிமா > மகனுக்கு தடை போட்ட அப்பா விஜய் கணவனுக்கு தடை விதித்த சங்கீதா

மகனுக்கு தடை போட்ட அப்பா விஜய் கணவனுக்கு தடை விதித்த சங்கீதா

கொரோனா வைரஸ் காரணமாகஉலக ஊரடங்கு அமுலுக்கு வந்ததன்காரணமாக வெளிநாடுகளில் தங்கள் மகனை படிப்பதற்காக அனுப்பிய இந்தியப் பெற்றோர்கள் பலர் தவித்து வருகின்றனர். அவ்வாறு தவித்து வருபவர்களில் நடிகர் விஜய்- சங்கீதா தம்பதியர். கனடாவில் விஜய்யின் மகன் ஜேஸன் சஞ்சய் ‘ஃபிலிம் மேக்கிங்’ பட்டப்படிப்பு படித்து வருகிறார் கொரோனா காரணமாக விமான போக்குவரத்து ரத்து ஆனதால் கனடாவில் இருந்து இந்தியா திரும்ப இயலாமல் போனது

தற்போது கனடா-இந்தியாவுக்கு இடையே சிறப்பு விமானங்கள் இயக்கம் தொடங்கிவிட்ட நிலையிலும் கூட விஜய் மகன் ஜேஸன் சஞ்சய் இந்தியா திரும்பவில்லை. இந்திய பிரதமர் மோடியும் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவும் ஏப்ரல் மத்தியிலேயே தொலைபேசியில் பேசிக் கொண்டனர். கனடா நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களையும், இந்திய நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான கனடியர்களையும் தத்தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்வது குறித்தும், கொரோனா கட்டுப்பாடுகள், மருந்துகள் தொடர்பாகவும்தான் அவர்கள் பேச்சு அமைந்திருந்தது.

அதன் விளைவாக மே மாதமே டொரான்ட்டோ, வான்கவர் விமான நிலையங்களில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் பின் ஜூன் 9 முதல் ஜூன் 30 வரை கனடாவில் இருந்து இந்தியாவுக்கு 26 சிறப்பு விமானங்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டன. இவற்றின் மூலம் கனடாவில் இருக்கும் இந்தியர்களை இங்கே அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே கனடாவின் தலைநகர் டொரான்ட்டோவில் இருக்கும் இந்திய தூதரகம் பதிவு அறிவிப்புகளை செய்திருந்தது.

நீலாங்கரையிலுள்ள தனது வீட்டில் இருக்கும் விஜய்யும், சங்கீதாவும் ஒவ்வொரு நாளும் இந்திய கொரோனா நிலவரங்களை அறிவதில் கொண்டிருந்த ஆர்வத்தை விட கனடா நாட்டின் நிலவரத்தை அறிவதில்தான் அதிக ஈடுபாடு காட்டினர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் மகன் சாப்பிட்டானா, அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா, ஆபத்து ஏதும் இல்லையே என்ற நினைப்பில்தான் இருவரும் இருந்தனர் என கூறப்பட்டது வந்தே பாரத் விமானத்தில் பதிவு செய்துவிடட்டுமா?” என்று கேட்டிருக்கிறார் விஜய்யின் மகன்.

மகனை நேரில் காண வேண்டுமே என்ற தவிப்பில் விஜய் முதலில் ஒ.கே. சொல்லிவிட மருத்துவம் படித்த விஜய்யின் மனைவி சங்கீதாவோ இப்போது மகன் இந்தியாவுக்கு வருவதில் இருக்கும் சிரமங்கள், ஆபத்துகளைவிஜய்யிடம் பட்டியலிட்டிருக்கிறார். சஞ்சய் தங்கியுள்ள இடத்தில் இருந்து விமான நிலையம் செல்ல வேண்டும், அங்கிருந்து இந்தியா வர சங் இருபது மணி நேரம், அந்த பயண நேரத்தில் யாரிடமிருந்தும் தொற்று பரவாமல் இருக்க வேண்டும், பின் இந்தியா வந்தால் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல், 7 நாட்கள் அரசு சொல்லும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பின் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக சென்னை மாநகராட்சி வீட்டில் அறிவிப்பு வைக்கும். அது அரசியலாகக் கூட ஆகலாம் என்பது வரையிலான பயண ரிஸ்க்குகளைப் பற்றிசங்கீீீதா கூறியதைபற்றி ஆலோசனை செய்தவிஜய், இப்போதைக்கு தனது மகன் சென்னை வர வேண்டாம், ஆரோக்கியமே முக்கியம் என்று முடிவெடுத்தார். அதனால், அங்கேயே இரு என்று சொல்லிவிட்டார்

விஜய்க்கு சங்கீதா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் . அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அடையாறில் இருக்கும் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும், அதுவும் விஜய்யே கார் ஓட்டிக் கொண்டு சென்று அங்கே செக்குகளில் கையெழுத்து போடும் வேலைகளை முடித்துவிட்டு உடனே வீடு திரும்ப வேண்டும். பனையூரில் இருக்கும் மக்கள் அதை ஏற்றுக் கொண்டு நடந்துவருகிறார் விஜய்.

இதுபோலவே அடையாறில் வசிக்கும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரனும்,விஜய்யின் அம்மா ஷோபாவும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கட்டுப்பாடுகளைக் கடைப் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வீடியோ காலில் அப்பா-அம்மாவுடனும், தாத்தா பாட்டியுடனும் பேசி வருகிறார் ஜேஸன் சஞ்சய் என்கின்றனர்

இந்தியாவில் கொரானா ஊரடங்கு காரணமாகபுலம்பெயர்ந்த இந்திய தொழிலாளி வாழ்வாதாரத்துக்கு வழியின்றி போக்குவரத்து இல்லாமல் சொந்த ஊருக்கு நோய்தொற்று பற்றி கவலைப்படாமல் நடந்தே சொந்த ஊருக்கு போனார்கள்

கோடீஸ்வரன் மகனாக இருந்தாலும் விமான போக்குவரத்து இல்லாமல் போனதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்த ஜேஸன் சஞ்சய் விமான போக்குவரத்து தொடங்கியும் நோய்தொற்றை எதிர்கொள்ள பயந்து வீடடங்கி இருப்பது நகைமுரண்

You may also like
விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
விஜய் நடிக்கும் அடுத்த படம் அலுவலக பூஜை
ரஜினி கட்சிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய அரசியல் நெருக்கடி

Leave a Reply