Home > சினிமா > காதல் ஒரே மாதிரி இருக்காது என்கிறார் சாரா அலி கான்!

காதல் ஒரே மாதிரி இருக்காது என்கிறார் சாரா அலி கான்!

பாலிவுட் ஹீரோ சைஃப் அலி கான் நடிப்பில் 11 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது லவ் ஆஜ் கல் திரைப்படம். அதே தலைப்பில் தயாராகும் புதிய படத்தில் அவருடைய மகள் சாரா அலி கான் நடிக்கிறார்.

இம்தியாஸ் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்திக்குடன் சாரா டேட்டிங்கில் இருப்பதாகவும், இருவருக்குமிடையே லவ் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டதாகவும் இந்திச் செய்திகள் பரபரக்கின்றன.

இந்நிலையில்தான் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டில் பேசிய சாரா, மிகுந்த பதட்டத்துடன் இருப்பதாக கூறினார். அவருடைய தந்தை நடித்த படம் என்பதால் பயமா என்று கேட்டபோது, “அதெல்லாம் இல்லை. எனது தந்தை காலத்து லவ் வேறு. இன்றைக்கு இருக்கிற லவ் வேறு. இன்றைய காதலர்களைப் பற்றிய கதைதான் இது. எனது பதற்றத்துக்குக் காரணம், என் மீது ஏராளமான அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் படம் திருப்தியாக வேண்டுமே என்பதுதான்” என்று அருமையாக ஐஸ் வைத்தார்.

எல்லாத்துக்கும் ஒரு திறமை வேண்டும் அல்லவா? ரசிகர்களையும் மீடியாக்களையும் அட்ராக்ட் செய்த சாரா, டைரக்டர் இம்தியாஸை சரமாரியாக புகழ்ந்து அவரையும் இம்ப்ரெஸ் செய்தார். “தனது கதாநாயகி எந்தமாதிரியான உணர்வுகளுடன் இருக்கிறாளோ அதே உணர்வை என்னிடம் பெறுவதற்கு இம்தியாஸ் மெனக்கெடுவார் என்றார். ஒவ்வொரு காட்சி முடிந்தவுடனும் எனது கருத்தை கேட்பார். கிட்டத்தட்ட நான் படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன்” என்கிறார்.

“படத்தின் கதாநாயகி ஜோவும் நானும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கேரக்டர்தான். இருவருக்குமே முன்னேற்றம்தான் முக்கிய இலக்கு. ஜோவும் நானும் அம்மாவின் வளர்ப்பில்தான் இருக்கிறோம். ஆனால், டெல்லிப் பெண்ணான ஜோ, பிறரால் பாதிக்கப்படுகிறாள். நான் அப்படி பாதிக்கப்பட்டதில்லை. என்னைப் போல இல்லாமல், ஜோ போராட்டக்காரியாக இருக்கிறாள். அவளைப்போல நான் வாழ்க்கையை அணுகுவதில்லை. நான் ரொம்ப ரிலாக்ஸ்ட் ஆனவள். ஆனாலும், இம்தியாஸ் ஸாரின் உதவியோடுதான் நான் ஜோவாக மாற முடிந்தது” என்கிறார் சாரா. 

“எனக்குள் எனது தந்தையின் குணம் அதிகமாக இருப்பதாக கூறுவது தவறு. என்னை எனது தாய்தான் வளர்த்தார். அவருடைய குணம்தான் எனக்குள் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது படிப்பும் எனது தெளிவுக்கு முக்கிய காரணம். நான் நானாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று நம்புகிறவள். அப்படி இருக்கும்போது பிறரை காப்பியடிக்க ஏன் முயற்சிக்க வேண்டும்?

காதலைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கிறது. எனக்குள் காதல் வந்தால் நிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். அப்படி காதல் வந்தால் அது உண்மையானதாகவும், பைத்தியமானதாகவும் இருக்கும். என்னையும் கதாநாயகன் கார்த்திக்கையும் இணைத்து பல செய்திகள் வெளிவருகின்றன. இந்தப் படத்தில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கார்த்திக் புரிந்துகொள்ளக்கூடிய மனிதர். விட்டுக்கொடுத்தார். கற்றுக்கொடுத்தார். உதவியாக இருந்தார். படத்தின் வெற்றிக்கு எங்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி உதவும். மற்றபடி இருவருக்கும் இடையே காதலெல்லாம் இல்லை” என்கிறார் சாரா அலி கான்.

You may also like
எத்தனை முறை சொல்லுவது
பேனா
காதல் தோல்வியில் புலம்பும் நடிகை மீரா நந்தன்!!
நான் நேசிப்பது உன்னை

Leave a Reply