Home > சினிமா > கமலிடம் சொத்து இல்லை என்று சொல்லும் ரஜினியின் சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடியாமே…!

கமலிடம் சொத்து இல்லை என்று சொல்லும் ரஜினியின் சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடியாமே…!

நடிகர் கமல்ஹாஸனிடம் இப்போதுள்ள நடிகர்களிடம் உள்ள சொத்துக்கூட இல்லை என்று ரஜினி வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்.

அதேசமயம் ரஜினியின் தற்போதைய சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள்.

தமிழர்களின் சினிமா மோகத்தை பயன்படுத்தி காலங்காலமாக நடிகர்கள் பணத்தை வாரிக் குவிக்கிறார்கள்.படாடோபமான வாழ்க்கை வாழும் அவர்கள் தமிழ் இளைஞர்களை பஞ்சைப் பாராரிகளாவே வைத்திருக்கிறார்கள்.

அதிலும் வேற்று மொழிபேசும் நடிகர்கள் தமிழர்களை தெய்வங்களாக வர்ணித்தே ஓட்டாண்டியாக்கி வருகிறார்கள்.

இப்போ இருக்கிற நடிகர்களில் கமல்ஹாஸன் சினிமா ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறவர்.இவர் தொடக்ககாலத்தில் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொன்னவர்.

ஆனாலும், அவருடைய அனுமதி பெறாமலேயே அன்றைய இளைஞர்கள் கமல் நடிப்புக்கு ரசிகர்களாக இருந்தார்கள்.அதே காலகட்டத்தில் நடிகரான ரஜினி தனக்கு ரசிகர் மன்றத்தை உருவாக்கி, அதற்கு தனது ஆள் ஒருவரையே நிர்வாகியாகவும் போட்டுக்கொண்டார்.

சினிமா கிறுக்கு பிடித்த தமிழ் இளைஞர்களின் கூட்டத்தை காட்டி, ரஜினி தனது சினிமா வருமானத்தை அதிகரித்துக் கொண்டார்.சொத்துக்களை கர்நாடகத்தில் வாங்கிக் குவித்தார்.

முதன்முதலில் ராகவேந்திரா கல்யாணமண்டபத்தை கட்டியபோது இது ரசிகர்களுக்கு காணிக்கை என்றார்.அந்த மண்டபத்திலிருந்த வரும் வருமானத்தைக்கூட ரசிகர்களுக்கு உதவ பயன்படுத்தியதில்லை.

இதுவரை ரஜினி தனது ரசிகர்களுக்கு உதவியதாக ஒரு நிகழ்ச்சியைக்கூட யாரும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

அப்படியே வேறு எதற்காவது உதவியிருந்தால் அது வருமான வரித்துறையை ஏய்ப்பதற்காகவே இருக்கும் என்கிறார்கள் திரையுலகினர்.

(6-4-17 அன்று எழுதப்பட்ட கட்டுரை)

You may also like
ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்! சன் பிக்சர்ஸ் முடிவு
சட்டத்தை கடைபிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா ரஜினிகாந்த்
கந்தசஷ்டி கவசம் – காலங்கடந்து மௌனம் கலைத்த ரஜினிகாந்த்

Leave a Reply