Home > சினிமா > தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தாணுவுக்கு சிங்காரவேலன் பதிலடி

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தாணுவுக்கு சிங்காரவேலன் பதிலடி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு செப்டம்பர் மாதம்தேர்தல் நடப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது.

இந்தச் சங்கத்துக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர்.அச்சங்கத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. அச்சங்கத்துக்கு நடிகர் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில்,கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கலைப்புலி தாணு, பாரதிராஜா சமாதானத்திற்கு முன்வந்தால் மற்ற பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்திக் கொண்டு, தலைவர் பதவிக்கு அவரையே ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் தயார் என்று பேசினார்.

இதுதொடர்பாக குரல்பதிவு வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சிங்காரவேலன், பாரதிராஜா உள்ளிட்டோரை தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தனி அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு வெளிப்படையாக, காலில் விழுகிறேன் புது சங்கம் வேண்டாம் என்று பேசுகிறார் கலைப்புலி தாணு.

பாரதிராஜா தலைமையில் 50 பேர், தாணு தலைமையில் கூடிய 50 பேர் தவிர 1251 உறுப்பினர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி.

இவ்வாறு சிங்காரவேலன் கூறியுள்ளார்.

You may also like
‘புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை’
தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி!” – பாரதிராஜா
சூர்யா அறிக்கைக்கு பாரதிராஜா பாராட்டு
சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை

Leave a Reply