Home > சினிமா > சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து

சூரரைப் போற்று திரைப்பட

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “சுதா கொங்காரா இயக்கத்தில் G v பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனலாய்.. காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதல்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது. வாழ்த்துகள்.. மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஆன்மா உள்ளது – இயக்குநர் பாண்டிராஜ்

“சூரரைப் போற்று திரைப்படம் ஓர் புதிய அனுபவம். இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆன்மாவைத் தொடும். சூர்யா சார் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ப்ரேமிலும் சுதா மேமின், கடின உழைப்பை என்னால் காண முடிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை தனித்தன்மையாக இருக்கிறது. இந்த தீபாவளிக்கு விஷுவல் ட்ரீட் ஆக இந்தப் படம் இருக்கும்” என இயக்குநர் பாண்டிராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூர்யா

“சூரரைப் போற்று ஓர் வெற்றிக் கதை. படத்தில், போராட்டம் மற்றும் வெற்றியில் சூர்யாவின் நடிப்பு முழுமை. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூர்யா. சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ், ராஜசேகரபாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துகள்” என கே.வி.ஆனந்த் ட்வீட் செய்திருக்கிறார்.

You may also like
நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா டுவிட்
சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்த, பிரபலங்களின் ட்வீட்
சூரரைப்போற்று படத்துக்கு தடை
கொரோனா முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா உதவி
சூரரைப் போற்று தயாரிப்பாளர் சூர்யாவுக்கு லாபம் 28 கோடி?

Leave a Reply