Home > சினிமா > தடுமாறும் ரஜினியின் நாடகம்… ரசிகர்களை சந்திக்கவே இவ்வளவு இழுபறியா?

தடுமாறும் ரஜினியின் நாடகம்… ரசிகர்களை சந்திக்கவே இவ்வளவு இழுபறியா?

புதிய படம் வரும் சமயத்தில் எல்லாம் ரசிகர்கள் தயவைப்பெற ஏதேனும் டிராமா போடும் ரஜினி இந்தத்தடவை அதையும் ஒழுங்காய் போடமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

தனது திரைப்பட செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்கு ரஜினிகாந்த் அவ்வப்போது ரசிகர்களை ஏமாற்றுவது வழக்கம்.

அரசியலுக்கு வரப்போவதாக பல காலமாக அவர் பூச்சாண்டி காட்டி வருகிறார்.அவரது பேச்சை நம்பி ரசிகர்கள் சொந்தப் பணத்தை செலவழித்து அமைப்புகளை உருவாக்கி நாசமாய் போனார்கள்.

ஒரு புதிய படம் வெளிவருவதற்கு முன்பு அவரை வைத்து படம் எடுப்பவர்களும் அவரும் ஏதேனும் ஒரு புதிய அரசியலை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

எந்திரன் இரண்டாம் பாகம் வரப்போகிற நிலையில் ரஜினி என்ற பெயரை பரபரப்பு ஆக்குவதற்கு பல முயற்சிகள் திட்டமிடப்படுகின்றன.ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் காமெடியாக மாற்றப்படுகின்றன.

எதிலும் நிலையற்றவரான ரஜினிகாந்த் தன்னை தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக நினைத்து செயல்படுகிறார்.ஆனால், இப்போது அவர் ஒரு கோமாளி அளவுக்குத்தான் மதிக்கப்படுகிறார் என்பது கொஞ்சம்கொஞ்சமாக தெரியவருகிறது.

எந்திரன் இரண்டாம் பாகத்தை விற்பதற்கு தனது ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு திட்டமிட்டார்.ஆனால், அந்தத்திட்டமும் தள்ளிக்கொண்டே போகிறது.

ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.அந்த நிகழ்ச்சி இதுவரை மூன்றுமுறை தள்ளிவைக்கப்பட்டது.இப்போது தேதியே குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கான காரணம் கூறப்படவில்லை. ஆனால், ரசிகர்களை மொத்தமாக வரவழைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வது சாத்தியம் இல்லை என்றும் மாவட்ட வாரியாக வரவழைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் ரஜினி தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், ரஜினி எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் கூட்டம் பெரியஅளவில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மை என்று தெரியவந்துள்ளது.

சொந்தப் பணத்தை செலவு செய்து இவருடன் புகைப்படம் எடுத்து என்ன செய்யப்போகிறோம் என்கிற மனப்பான்மை பழைய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தங்களை வைத்து ரஜினிகாந்த் அரசியலில் முக்கியத்துவம் பெற்று தனக்கான காரியங்களை மட்டும் சாதித்துக்கொள்வதாக அவர்கள் புரிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுவரை வெளியான அவருடைய படங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்ட கதை திரை உலகில் பிரபலம்.ஆனால், படத்தை வாங்கியவர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக புலம்பியதும் தெரிந்த விஷயம்தான். படத்தை விற்பதற்காகவே ரஜினிகாந்த் தங்களை வைத்து நாடகம் நடத்துகிறார் என்ற உண்மை ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது என்று ரஜினியை நம்பி ஏமாந்த பழைய ரசிகர்கள் கூறுகிறார்கள்.

(8-4-17 அன்று எழுதப்பட்ட கட்டுரை)

You may also like
ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்! சன் பிக்சர்ஸ் முடிவு
சட்டத்தை கடைபிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா ரஜினிகாந்த்
கந்தசஷ்டி கவசம் – காலங்கடந்து மௌனம் கலைத்த ரஜினிகாந்த்

Leave a Reply