Home > சினிமா > யுவன்சங்கர்ராஜா இணையும் வெற்றிக் கூட்டணி

யுவன்சங்கர்ராஜா இணையும் வெற்றிக் கூட்டணி

ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தபடம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க, இளன் இயக்கியிருந்தார். இப்போது, இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

2018ஆம் ஆண்டு இளன் இயக்கத்தில் வெளியானது பியார் பிரேமா காதல். ரைசா நாயகியாக அறிமுகமான படம். அதுபோல, ஹரிஷ் கல்யாணுக்கும் பெரிய பிரேக் கொடுத்த படம் இதுதான். இந்தப் படத்துக்குப் பிறகுதான், ஹரிஷ் கல்யாணுக்குப் அதிகவாய்ப்புகள் வந்தன.

மாஸ்டர் படத்தின் நிர்வாகதயாரிப்பாளரான லலித்குமார் இந்தபடத்தைத் தயாரிக்கிறார்ஹரிஷ் கல்யாண் லீட் ரோலில் நடிக்க, இளன் படத்தை இயக்குகிறார்.

படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. பியார் பிரேமா காதல் போலவே, இந்தப் படமும் காதலை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறதாம்.

You may also like
யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்
இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
யுவன்சங்கர்ராஜா தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்
விஜய் ஆண்டனி பிறந்த நாளில் பிச்சைகாரன் – 2 பட அறிவிப்பு

Leave a Reply