Home > சினிமா > பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை : ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை : ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராத்புத் 2013ல் வெளியான “கை போ சே” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் பெரும் நடிகராக அவரை முதன்முதலாக அடையாளம் காட்டியது “தோனியின் வாழ்க்கை வரலாறு” படம்தான். அதற்கு பிறகு ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களாலும் “தோனியின் வாழ்க்கையை சுஷாந்த் சிங் தவிர யாருமே நடிக்க முடியாது” என உறுதியாக சொல்லுமளவிற்கு பிரபலமான நடிகர் ஆனார்.

அதை தொடர்ந்து அவர் நடித்த கேதர்நாத், சிச்சோரே போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. இந்நிலையில் சுஷாந்த் சிங் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடைசியாக ”தில் பச்சாரா” என்ற படத்தில் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். கொரோனா முடக்கம் ஏற்பட்டிருக்காவிட்டால் இந்த படம் மே மாதத்தில் வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இவர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக திடீரென இன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்
அவர்களின் தற்கொலை செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சியுடன் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like
சித்ரா மரணத்தில் காவல்துறை சந்தேக வளையத்தில் சட்டமன்ற உறுப்பினர்
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை
வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்: நடந்தது என்ன?
சினிமா படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்கும் லாபம் படக்குழு

Leave a Reply