Home > சினிமா > மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமன்னா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமன்னா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த லிஸ்ட்டில் நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார்.

Tamannaah Bhatia

கொரோனாவால் தமன்னா பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நானும், எனது குழுவைச் சேர்ந்தவர்களும் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினாலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டுமென்பது கட்டாயம் என்பதால், செய்து கொண்டேன். அதில், எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

எனவே, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டேன்.

மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருந்த நான், சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ளேன். இது கடினமான வாரமாக இருந்தாலும், நான் நன்றாகவே உணர்கிறேன்.

உலகெங்கும் உள்ள பலரைத் துன்பப்படுத்தும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து நான் முழுமையாகக் குணமடைவேன் என்று நம்புகிறேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி தற்போது தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என்மீது அன்பு செலுத்திய, அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்’ என தெரிவித்துள்ளார் தமன்னா.

தமன்னாவின் இந்த அறிக்கையால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may also like
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்
பெங்களூருவிலிருந்து தென்கொரியாவுக்கு விமானம் ஏற்பாடு செய்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் “ஆபரேசன்-காமராஜர் தந்த கல்வி”
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகள் ; காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றது உ.பி. அரசு
பிணந்தின்னும் ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகளோ?

Leave a Reply