Home > சினிமா > ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் – டாப்ஸி

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் – டாப்ஸி

‘ஆடுகளம்’ திரைப்படத்தில் டாப்ஸி அறிமுகமானார்.

புதுடெல்லியில் பிறந்தவர் நடிகை டாப்ஸி பண்ணு 33 வயதாகும் இவர் 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜும்மாண்டி நாடம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் 2011ம் ஆண்டு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் டாப்ஸி அறிமுகமானார்.

இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தமிழில் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்தார்.

அதேபோல தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், பின்னர் இந்தி படங்களிலும் நடித்து, தற்போது இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் டாப்ஸி ஆரம்ப காலத்தில், தான் திரை உலகில் சந்தித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

அதில் அவர், ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை என்பதால் ஒரு படத்திலிருந்து நான் நீக்கப்பட்டிருக்கிறேன்.

ஒரு ஹீரோவுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை என சொன்னதற்கு, நான் மறுப்பு சொன்னதால் எனக்குத் தெரியாமல் வேறு ஒரு டப்பிங் கலைஞரை பேச வைத்தார்கள்.

ஒரு படத்தில் ஹீரோவின் காட்சியை விட எனது அறிமுக காட்சி சிறப்பாக இருந்ததால் எனது சீனை மாற்ற வைத்தார்.

ஒரு நடிகரின் முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதால் எனது சம்பளத்தை குறைக்கச் சொன்னார்கள்.

எனது திரைத்துறை பயணத்தின் தொடக்கத்தில் இப்படி பல்வேறு விதமான நெகட்டிவ்வான அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

எந்தப் படத்தில் பணியாற்றினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ அந்தப் படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்த பின்னர் ஒரு சில ஹீரோக்கள் அந்த நடிகையை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயங்க ஆரம்பித்துவிடுவார்கள் என நடிகை டாப்ஸி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த துடுக்கான பேச்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

You may also like
கதைக்காக ஒரு கோடி சம்பளம் வாங்கும் நந்தா பெரியசாமி
காதலிப்பதை ஒப்புக் கொண்ட டாப்ஸி

Leave a Reply