Home > சினிமா > என்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி

என்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித்துணிக உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த என் பெயர் ஆனந்தன் படத்தின் விளம்பரங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று இவர் மீது புகார் சொல்லப்பட்டது

இதுகுறித்து அதுல்யாரவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,,,,

இந்தப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். அப்படத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நடித்துள்ளேன். இந்தப்படம் தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை.

இது திரைப்பட விழாக்களுக்கு மட்டுமே அனுப்பவிருக்கிற படம் என்று என்னிடம் சொன்னார்கள்.

அதன்பின் விருது விழாக்களுக்கு அனுப்பி விருதுகள் பெற்றது என்று சொல்லி ஒருமுறை அது குறித்து ட்வீட் போடச் சொன்னார்கள். அதை ட்வீட் செய்தேன்.

அதன்பின் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை.அவர்கள் அழைத்த விவரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள்.

இந்தப்படம் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது அது சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் என்னிடம் சொல்லவில்லை.

படத்தை விளம்பரம் செய்ய வாருங்கள் என்று என்னிடம் சொல்லாமலே என்னைப் பற்றிப் பொதுவெளீயில் இவர்கள் குற்றம் சொல்கிறார்கள் என்றால், நான் வந்து செய்யும் விளம்பரத்தை விட இது பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

அதனால்தான் இதுகுறித்து நான் எந்த எதிர்வினையும் செய்யவில்லை.
நான் நடிக்கிற படங்களில் என்னுடைய ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கிறது அந்தந்தக் குழுவினரிடம் கேட்டுப்பாருங்கள்.
இவ்வாறு அதுல்யாரவி கூறினார்.

Leave a Reply