Home > சினிமா > விஜய் நடிக்கும் அடுத்த படம் அலுவலக பூஜை

விஜய் நடிக்கும் அடுத்த படம் அலுவலக பூஜை

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது.

அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தின் திரைக்கதை வடிவம் இறுதியாகிவிட்டதென்றும் அதை விஜய் ஏற்றுக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

யாரும் எதிர்பாராத வகையில் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகவிருக்கிறதென்றும் அதேசமயம் விஜய்யின் மாஸ் ஹீரோ என்கிற பிம்பத்துக்குப் பங்கமில்லாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை என்றாலும், இன்று இப்படத்துக்கான அலுவலக பூஜை எளிமையான முறையில் போடப்பட்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாம்.

இப்பட அறிவிப்புக்காக விஜய்யை வைத்து புதிய புகைப்படப் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்திருக்கிறதாம்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவிருக்கிறது என்கிறார்கள் 

You may also like
தமிழ் பட தயாரிப்பு – விநியோகத்தில் நயன்தாரா
விஜய் நடிக்கும் படத்தின் இயக்குனர் நெல்சன் சம்பளம்?
காதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா
விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Leave a Reply