Home > சினிமா > தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் இயக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. திரையரங்குகள் இல்லாததால் திரைத்துறையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

தற்போது மத்திய அரசு தளர்வுகள் அளித்துள்ளதை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் தியேட்டர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இயங்கி வருகிறது.

தமிழ்நாட்டிலும் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்து வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்காதது, தியேட்டர் உரிமையாளர்களை அதிருப்தி அடையச் செய்தது.

இந்நிலையில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவும், நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், பூங்காக்களை திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சின்னத்திரை படப்பிடிப்புகளில் ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

You may also like
தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு
சினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்
செப்டம்பர் முதல் தியேட்டர்கள் திறக்கப்படுமா?
திரையரங்குகள் திறப்பு அறிவிப்பு பங்குசந்தையில் பண புழக்கம் நீடிக்குமா?

Leave a Reply