Home > சினிமா > ஜோ பைடனுக்கு வைரமுத்து வாழ்த்து..

ஜோ பைடனுக்கு வைரமுத்து வாழ்த்து..

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 214 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அதேபோல் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளும் ,தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ” நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும், நான் எல்லா அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன் என்று ஜோ பைடன் கூறினார்.

அவரது மகத்துவத்திற்கு இதுவே சான்று! தனக்கு எதிராக குடை பிடிப்பவர்களுக்கும்சேர்த்து தான் மழை பொழிகிறது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply