Home > சினிமா > மாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்!

மாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக விவாத பொருளாக இருப்பது”மாஸ்டர்” திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகுமா அல்லது OTTயிலா என்பது தான் ஏப்ரல் மாதம் வெளிவந்திருக்க வேண்டிய மாஸ்டர் கொரானா காரணமாக வெளியிட முடியாமல் போனது.

பொங்கல் பண்டிகைக்காவது இப்படம் தியேட்டரில் ரீலீஸ் செய்யப்படுமா என்ற காத்திருப்பில் திரையரங்குகளும், விஜய் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.


இதற்கிடையில் மாஸ்டர் படம் OTTயில் வரப்போகிறது திரையரங்குகள் வழக்கமான சதவீத அடிப்படையில் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யாமல் கூடுதலாக தரவேண்டும் என்கிற லாபி தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குரூப்களில் உருவாக்கப்பட்டு வருகிறது.


சினிமாவில் கொரானா காரணமாக தொழில்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது தயாரிப்பாளர் மட்டுமே தைரியமாக அவர் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்கிறார் அதனால் திரையரங்குகள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற கருத்து அழுத்தம் கொடுத்து கூறப்படுகிறது மாஸ்டர் தியேட்டரில் வெளியாகவில்லை என்றால் அந்த தொழில் முற்றிலுமாக முடங்கிவிடும் என்கிற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியும் இங்கு நடைபெறுகிறது.


இந்த சூழ்நிலையில் மாஸ்டர் தியேட்டரிலா, OTTயிலா என்பதை உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் தயாரிப்பாளர் மற்றும் தமிழக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.


மாஸ்டர் படம் பகடையாக கோடம்பாக்க சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்படுகிறதா இதன் மூலம் என்கிற விசாரணையில் இறங்கிய போது ரஜினிகாந்துக்கு இணையாக தனது சம்பளம் உயரவேண்டும் என்பதற்காக விஜய் தரப்பில் வடிவமைக்கப்பட்டது தான் “மாஸ்டர்” படம் பிற நிறுவனங்களின் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் இயக்குனர்களாக ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

ஆனால் அவர் உறவினர் பெயரில் தயாரிக்கும் படத்தின் இயக்குனர் கைதி வெளிவருவதற்கு முன்பே பிரபலமாகாத லோகேஷ் கனகராஜ் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு கோடிக்கணக்கான சம்பளம் தவிர்க்கப்பட்டது.

அட்லி, முருகதாஸ் இயக்கும் படங்களில் நடிக்க 150 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து அதிக பட்சமாக 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு கொடுத்த கால்ஷீட் 50 நாட்கள் மட்டுமே படத்தின் படப்பிடிப்பு செலவுகள் 50 கோடிகளுக்குள் முடிக்கப்பட்டது.

ரஜினிக்கு இணையாக தனக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றால் பிகில் படத்தை காட்டிலும் அதிக விலைக்கு மாஸ்டர் படத்தை வியாபாரம் செய்யக்கூடிய மாஸ்டர் மைண்ட் உள்ளவர் தேவை என்பதற்காக லலித்குமார் நிர்வாக தயாரிப்பாளராக்கப்பட்டார் தமிழ் சினிமா வட்டாரத்தில் வியாபார ரீதியாக நல் உறவு வைத்திருப்பதால் மாஸ்டர் படத்தை 200 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்ய முடிந்தது.

இதன் காரணமாக விஜய் சம்பளம் 75 கோடியாக நிர்ணயிக்க முடிந்திருக்கிறது சுமார் 125 கோடியில் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் படத்தின் தொலைக்காட்சி உரிமை 31 கோடி ரூபாய், இந்திடப்பிங் உரிமை 18 கோடி ரூபாய், வெளிநாட்டு விநியோக உரிமை 26 கோடி ரூபாய், ஆடியோ உரிமை 5 கோடி ரூபாய், நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் உரிமை 20 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட வகையில் 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.


இது தவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா, வட இந்திய உரிமைகள் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது இதில் தமிழக உரிமை மட்டும் 70 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளது ஆக 125 கோடியில் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் 200 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளதுதிட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் மாதம் மாஸ்டர் ரீலீஸ் செய்யப்பட்டிருந்தால் தயாரிப்பாளருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

இருந்தபோதிலும் திரையரங்குகள் அதிகபட்ச பங்கு தொகைதர வேண்டும் இல்லை என்றால்OTTயில் மாஸ்டர் ரீலீஸ் ஆகிவிடும் என திட்டமிட்ட பிரச்சாரத்தை தயாரிப்பாளர்கள் தரப்பில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த சூழ்நிலையில் மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்பதற்காக விஜய் தனது சம்பளத்தில் 20 கோடி ரூபாய் குறைத்து கொள்வதாக கூறியிருக்கிறார் தமிழகத்தில் எம்.ஜி.அடிப்படையில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு அவை விநியோக உரிமையாக மாற்றிதர தயாரிப்பாளர்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நேற்று சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எம்.ஜி அடிப்படையில் பேசி முடிக்கப்பட்ட விலை அடிப்படையில் பணத்தை தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தர்கள் கொடுக்க வேண்டும் என்கிற தமிழக விநியோகஸ்தரின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.


மாஸ்டர் படத்தின் விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பானதற்கு காரணம் தயாரிப்பாளரின் பேராசையே காரணம் கொரானாவினால் தயாரிப்பாளர் மட்டுமல்ல விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறைத்து தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் விட்டு தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் என்கிறது தியேட்டர் வட்டார தகவல்.

– அம்பலவாணன்

You may also like
விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
விஜய் நடிக்கும் அடுத்த படம் அலுவலக பூஜை
ரஜினி கட்சிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய அரசியல் நெருக்கடி

Leave a Reply