Home > சினிமா > விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : வலுக்கும் கண்டனம்

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : வலுக்கும் கண்டனம்

நடிகர் விஜய் சேதுபதி தீவிர யோசனையில் உள்ளாராம்.

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூகவலைதள பக்கத்தில் ஒருவர் பாலியல் ரீதியான மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவரை பிடிக்கவில்லையா? அவரின் கருத்து ஏற்புடையதாக இல்லையா? உடனே சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தை இழிசொற்களால் அவமானப்படுத்தி அழகு பார்க்கிறார்கள் சில வக்கிர புத்தி கொண்ட மிருகங்கள்.

அப்படி தற்போது விமர்சிக்கப்பட்டிருப்பது நடிகர் விஜய் சேதுபதியின் மகள். 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானசில நாட்களில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள் தாமரை, வைரமுத்து , சீமான், திருமுருகன் காந்தி என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இருப்பினும் முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இல் தொடர்ந்து நடிக்கிறேனா ? இல்லையா? என்பதை விஜய் சேதுபதி அறிவிக்காமல் இருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.

இதனிடையே விஜய் சேதுபதி மகளுக்கு நெட்டிசன் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தார். கொச்சையான வார்த்தைகளால் ரித்திக் என்ற பெயரில் வெளியான அந்த பதிவை கண்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரின் ட்விட்டர் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று அவரின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடப்பட்டது. இதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

You may also like
நடிகர் பார்த்திபன்
”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்
தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது : ராஜ்கிரண்
வணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி?
வளர்பிறையில் கறை எதற்கு ?- வைரமுத்து

Leave a Reply