Home > சினிமா > சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு

குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.  அவற்றிற்கு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அவர் விக்ரம்பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கார்த்தி மற்றும் விஷால் படங்கள் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் அதற்கு முன்னதாக விக்ரம்பிரபு படத்தைத் தொடங்கத் திட்டமிட்டி ருக்கிறாராம். இப்படம் முழுநீளத் திரைப்படம் என்றும் இணையதளத் தொடர் என்றும் இரு தகவல்கள் இருக்கின்றன.

இப்படத்தைத் தயாரிப்பு சன் நிறுவனம் என்பதால் இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கின்றது.

இணையதள நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய திரைப்படங்களை வாங்கி ஒளிபரப்பிக் கொண்டிருப்பதால் சன் நெக்ஸ்ட் செயலிக்காக இந்த இணையதளத் தொடர் தயாராகிறது என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், இதை முழுநீளத் திரைப்படமாக எடுத்து திரையரங்குகளில் வெயியிட்டுவிட்டு அதன்பின் சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிடலாம் என்றும் யோசிப்பதாகச் சொல்கிறார்கள்.

எதில் வெளிவருகிறது என்பதில் மாற்றமிருக்கலாம் ஆனால் முத்தையா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கிறார் என்பதில் மாற்றமில்லை என்கிறார்கள். 

You may also like
சன் பிக்சர்ஸுடன் நடிகர் விஜய் மோதல்

Leave a Reply