Home > சினிமா > ஆக்ஷன் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்… விஷால் 8 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஆக்ஷன் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்… விஷால் 8 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட விஷால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு 8.29 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ரவீந்திரன் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சம் ரூபாயை திருப்பி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதே போல் ஆக்ஷன் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. ஆனால் விஷால் திருப்பி தருவதாகக் கூறிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சக்ரா படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஆனந்தன் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதை படமாக எடுக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.

ஆனால் தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையைத் தான் ‘சக்ரா’ என்ற பெயரில் விஷால் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம்

எனவே சக்ரா படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும், 8.29 கோடி ரூபாயை திருப்பி அளிக்கக் கோரியும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதைத்தொடர்ந்து செப்டம்பர் 30 வரை படம் வெளியீடு குறித்த நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின் படி, ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட நடிகர் விஷால் ஆக்ஷன் படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ .8.29 கோடி அளிக்க உத்தரவாதம் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனால் சக்ரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

You may also like
20 விருதுகளைக் குவித்த குறும்படம்..
காவல் துறையினருக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கிய விஷால்

Leave a Reply