Home > சினிமா > புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் – 4 ஒளிபரப்பு எப்போது

புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் – 4 ஒளிபரப்பு எப்போது

2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரானா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து திட்டமிடப்படாமல் இருந்தது.

இதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆகையால் தமிழிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு ‘பிக் பாஸ் 4’ தொடர்பான விளம்பரப் படப்பிடிப்பை கமல் தொடங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது.

இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகம் ஆனார்கள். இதனிடையே, நேற்று (ஆகஸ்ட் 27) இரவு 8 மணிக்கு முக்கிய அறிவிப்பு என்ற ஒரு விளம்பரத்தை விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பலரும் இது பிக் பாஸ் தொடர்பான அறிவிப்புதான் எனக் காத்திருந்தனர்.

அதன்படி, தற்போது ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான அறிமுகக் காணொலியை கமல் வெளியிட்டுள்ளார்.

இதற்கு இரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரப்படத்தில் கமல் புதிய தோற்றத்தில் இருக்கிறார்.

விரைவில் ட்ரெய்லர் ஒன்று வெளியிடப்படவுள்ளது. அதில்தான் நிகழ்ச்சி எப்போதிருந்து ஒளிபரப்பு என்கிற தகவல் இருக்கும்.

You may also like
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா?
நடிகர் கமல்ஹாசன்
மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்
அக்ஷரா ஹாசனின் பாடலைப் பகிர்ந்து காந்தி நினைவைப் போற்றிய கமல்ஹாசன்!
அக்‌ஷ்ராவின் புதிய பட ஃபர்ட்ஸ்லுக் ரிலீஸ்

Leave a Reply