Home > சினிமா > தன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா?

தன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா?

இந்திய சினிமாவில் எல்லாவகையிலும் வித்தியாசப்பட்டு தனித்து நிற்பது தமிழ்சினிமா அதனால்தான் சினிமா துறையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நிகழ்த்தப்பட்டாலும் அரசியலாக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகிறது தமிழ்சினிமா.

எல்லா தொழில்களும் முழுமையாக செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கினாலும் திரையரங்க தொழிலுக்கு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

அதேவேளை படப்பிடிப்புக்கு இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் அரசால் விலக்கிகொள்ளப்பட்டது அதிகமான உற்பத்திக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு உற்பத்தியான பொருட்களை விற்பனை செய்வதற்கு தடையாக இருந்தது.

திரையரங்க உரிமையாளர்களின் தொடர் முயற்சிக்கு பின் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு அமைதியாக இதனை கடந்துபோயிருக்க வேண்டிய கலையுலகம் போட்டிபோட்டுக்கொண்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க முகம் தெரியாதவர்கள் கூட சமூக ஆர்வலர்கள்.

எனும் பெயரில் கருத்துகந்தசாமிகளாக 100% அனுமதிக்கு எதிராக கம்பு சுற்ற தொடங்கினார்கள்.

இதில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் தமிழ் சினிமாவுக்கு இருக்கிறது குறைந்த நாட்களில் வசூலை எடுக்க வேண்டும் என்கிற அவசரம், பேராசை இல்லாமல் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் இருவாரங்களில் இரண்டு படங்களின் முதலீட்டை லாபத்துடன் திரையரங்குகள் மூலம் வசூல் செய்ய இயலும் என்கின்றனர் வியாபார அனுபவசாலிகள்

பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகம் பிடித்தன.

இந்நிலையில், திடீரென நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில்பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது

இதனால் மாஸ்டர் ஈஸ்வரன் ஆகிய இரண்டு பட நிறுவனங்களும் திகைத்துப் போயிருக்கின்றன. ஐம்பது விழுக்காடு கூட்டத்தை வைத்து இரு படங்கள் வெளியிட இயலாது என்கிற தயக்கம்

இந்தநிலையில் இத்திடீர்ச் சிக்கலுக்கான தீர்வாக திரையுலக அனுபவஸ்தர்கள் கூறுவதாவது…..

நூறு விழுக்காடு இருக்கைகள் என்பதால் இரண்டு படங்கள் வெளியிட வாய்ப்பு இருந்தது.

அது அப்படியே தொடர்ந்தால் இரண்டு படங்களும் திட்டமிட்டபடி வரலாம்.

அப்படி இல்லாமல் ஐம்பது விழுக்காடுதான் என்று முடிவானால், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முதலில் அறிவித்த படம் என்கிற அடிப்படையில் எல்லாத் திரையரங்குகளையும் மாஸ்டர் படத்துக்கே ஒதுக்கலாம்.

திரையரங்கு உரிமையாளர்கள் ஒற்றுமையாக இப்படி ஒரு முடிவெடுத்து அதனை அனைவரும் ஒப்புக்கொண்டால் எல்லாத் தடைகளையும் மீறி திரையுலகைப் புத்துணர்ச்சி அடையச் செய்யலாம் முதல்வார முடிவில் மாஸ்டர் படத்துக்கான முதலீட்டை லாபத்துடன் திரையரங்குகள் மூலம் வசூல் செய்ய இயலும் என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.

அதன்படி ஜனவரி 22 அன்றுமுதல் மாஸ்டர் படத்துக்கு எல்லாத் திரையரங்குகளையும் ஒதுக்கியது போன்று இல்லாமல் சுமார் 500 திரையரங்குகள் வரை ஒதுக்கினாலே முதல் வார முடிவில் ஈஸ்வரன் பட முதலீட்டை லாபத்துடன் எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

இரு தரப்புமே விட்டுக் கொடுக்க தயங்கினால் 60%-40% என்கிற அடிப்படையில் திரையரங்குகளை பிரித்து மாஸ்டர், ஈஸ்வரன் படங்களை திரையிட்டால் இருவாரங்களில் மூலதனத்தை லாபத்துடன் திரையரங்குகள் மூலம் எடுக்க முடியும் வெளியிலிருந்து வரும் இடர்களை எதிர்கொண்டு  திரையுலகம் எழுங்கி பெற இது நல்ல வழி என்கின்றனர். எல்லோரும் ஒருங்கிணைந்து இதை செயல்படுத்துவார்களா?

Leave a Reply