Home > செய்திகள் > ஏப்ரல் 5: மின் இணைப்புகளில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன தெரியுமா?

ஏப்ரல் 5: மின் இணைப்புகளில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன தெரியுமா?

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந் திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் மோதி கோரிக்கை விடுத்திருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் விளக்குகளை அணைப்பதால் மின் தொடரமைப்பு பாதிக்கப்படுமா?

வெள்ளிக்கிழமையன்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோதி, ஞாயிற்றுக் கிழமையன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடும்படி கோரியிருக்கிறார். இதற்கு முன்பாக மார்ச் 22ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு கைகளைத் தட்டும்படி பிரதமர் கோரிக்கைவிடுத்தபோது, அதற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

அதேபோல, இந்தக் கோரிக்கைக்கும் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 9 நிமிடங்களுக்கு கோடிக்கணக்கான மின் விளக்குகள் அணைக்கப்படலாம்.

ஆனால், இப்படி ஒரே நேரத்தில் விளக்குகளை அணைப்பதால் திடீரென மின்தேவை குறையும். திடீரென மின் தேவை குறைவதோ, அதிகரிப்பதோ மின் உற்பத்தியையும் மின் தொடரமைப்பையும் கடுமையாக பாதிக்கக்கூடும்.

You may also like
பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்கிறாரே மோடி. ஏன்?
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
நரேந்திரமோடி வெளிநாடு செல்லாத 2020

Leave a Reply