Home > அரசியல் > காமெடியன்களா மோடியும் அமித்ஷாவும்?

காமெடியன்களா மோடியும் அமித்ஷாவும்?

மோடி, அமித்ஷாவின் தந்திரங்களையும் மிரட்டல்களையும் அடித்து நொறுக்கும் திமுக கூட்டணியைப் பார்த்து மத்திய அரசு நொந்து நூடுல்ஸாகி இருக்கிறது. மோடி அரசு எதைச் செய்தாலும் கிண்டலாகவும், கேலியாகவும் ஆக்கி, அவர்மீதான மக்கள் வெறுப்பை அதிகரிக்கச் செய்து, திமுக கூட்டணிக்கு சாதகமாக்கும் வேலையை திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்ல, அவருடைய மகன் உதயநிதி மட்டுமல்ல, அவருடைய சகோதரி கனிமொழி எம்.பி.யும் சளைக்காமல் செய்கிறார்கள். இது திமுக, நான் கலைஞரின் மகன், நான் கலைஞரின் மகள், நான் கலைஞரின் பேரன் என்று சவால் விடுகிறார்கள். உன் மகன் சொத்துக்கும் எனது சொத்துக்கும் ஜோடி வச்சுக்குவமா? என்று உதயநிதி அமித்ஷாவின் உச்சி மண்டையில் நச்சென்று அடிக்கிறார். ஆனால், அவர்களோ, சொன்ன பொய்யையே திரும்பச் சொல்லும் கோயபல்ஸ் வாரிசுகளாக வலம் வருகிறார்கள். அவர்கள் வந்துபோகும் தொகுதிகளில் அதிமுகவின் வாய்ப்பு அதலபாதாளத்திற்கு சரிகிறது. திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. இதையடுத்து திமுக வேட்பாளர்களும் காங்கிரஸ் வேட்பாளர்களும் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரத்துக்கு வரும்படி மோடிக்கு ட்வீட் செய்கிறார்கள். இதுபோன்ற நிலை இதுவரை தமிழகம் வந்த எந்த இந்திய பிரதமருக்கும் நேர்ந்ததில்லை. மோடியும் அமித்ஷாவும் வில்லாதி வில்லர்களாக கருதப்பட்டாலும், அவர்களை காமெடியன்களாக மாற்றி தமிழகம் சிரிக்கிறது.

Leave a Reply