Home > முகப்பு > காஷ்மீர் டாக்டர்களுக்கு சிறை மிரட்டல்!

காஷ்மீர் டாக்டர்களுக்கு சிறை மிரட்டல்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஷ்மீர் நிர்வாகம் மிரட்டியுள்ளது.

டிசம்பர் மாதம் கடைசியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் குறித்து, மார்ச் 4 ஆம் தேதிதான் காஷ்மீரில் உள்ள டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகும் அந்த வைரஸ் குறித்து முழுவிவரம் அறிய முடியாமல் டாக்டர்கள் தவிக்கிறார்கள்.

ஏனென்றால், காஷமீர் மாநிலத்தில் கடந்த எட்டு மாதங்களாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சாலைகளும் துண்டிக்கப்பட்டு, இந்தியாவிலிருந்தே அது துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் கடினமான சூழ்நிலையிலும் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வெறும் 2ஜி அளவுக்கே இணையத் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பைக் கொண்டு கொரோனா குறித்த லேட்டஸ்ட் தகவல்களை பெறமுடியாமல் தவிக்கிறார்கள்.

போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், இணைய வசதி இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு, நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்கள் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply