Home > சினிமா > சினிமா பிட்ஸ்….பிட்ஸ்….பிட்ஸ்……

சினிமா பிட்ஸ்….பிட்ஸ்….பிட்ஸ்……

இந்தியில் ஹிட்டடித்த ‘அந்தாதூன்’ படத்தினை ‘அந்தகான்’ என்ற பெயரில் தமிழில் ரிமேக் பண்ணுகிறார் மம்பட்டியான் தியாகராஜன். பிரசாந்த்—சிம்ரன், சமுத்திரக்கனி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஹீரோ பிரசாந்த்.

ரேஸ் என்ற கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தை வாங்கினார் சினிமா தயாரிப்பாளரான ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம். விஜய் நடித்த ‘பிகில்’ படத்திற்குப் பின் இப்போது காமெடி நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தினை சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் ஆரம்பித்துள்ளது ஏஜிஎஸ். டிவியில் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லட்சுமி படத்தின் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
பல குறும்படங்களையும் விளம்பரப் படங்களையும் டைரக்ட் பண்ணிய கிஷோர் ராஜ்குமார், இப்படத்தின் மூலம் சினிமா டைரக்டராக அறிமுகமாகிறார். படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நடிகை சாய் தன்ஷிகாவுக்கு சகலவிதத்திலும் சப்போர்டாக இருந்த தொழிலதிபர் ஒருவர், சமீபகாலமாக தன்ஷிகாவைக் கண்டு கொள்வதில்லையாம். தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும் அந்த தொழிலதிபரின் தயவால் தன்ஷிகாவுக்கு கரன்சி பஞ்சமில்லாமல் இருந்தது. இப்போது தொழிலதிபரும் கைவிட்டுவிட்டதால், தெலுங்கு சினிமாவில் கிளாமர் தூக்கலான கேரக்டர்களில் நடிக்க ஆந்திராவில் லேண்டாகிவிட்டாராம் சாய் தன்ஷிகா.

தனக்கு நல்ல கைடாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியால் சினிமாவில் நல்ல சான்ஸ் வாங்கித் தரமுடியலையே என்ற கவலையில் இருக்கார் காயத்ரி.

–சீமராஜா

You may also like
கோலிவுட்டில் புதுசு!
இந்த வார ஃப்ரெஷ் போட்டோ ஷூட்
ரஜினி மகளின் வேண்டுகோள்!

Leave a Reply