Home > முகப்பு > தமிழ் இந்து நாளிதழின் அயோக்கியத்தனம்!

தமிழ் இந்து நாளிதழின் அயோக்கியத்தனம்!

28 இடங்களில் சோதனை என்று தலைப்பு போடத்தெரிகிறது. சோதனை முடிவை மாலையிலேயே அதிகாரிகள் கூறிவிட்டார்கள். அந்த முடிவையும் சொல்லியிருக்க வேண்டும். சிக்கியது என்ன என்று சொல்லியிருக்க வேண்டும்.

அல்லது, திமுக தலைவரின் மகளும் மருமகனும் என்ன சொன்னார்கள் என்பதை முதல் பக்கத்தில் கொண்டுவந்திருக்க வேண்டும். நேற்று காலையிலிருந்தே, ஸ்டாலின் மகள் வசிப்பது ஒரு அபார்ட்மெண்டின் பிளாட் என்று சமூக வலைத்தளங்களில் விளக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்கு ஸ்டாலின் மகள் வசிப்பது அபார்ட்மெண்ட்டா? பிளாட்டா என்பதுகூடவாத தெரியாது. அவ்வளவுபெரிய முட்டாளையா தமிழ் இந்து நிறுவனம் ஆசிரியராக வைத்திருக்கிறது?

தெரிந்தே அபார்ட்மெண்ட்டை பங்களா என்று தலைப்பு போட்டிருந்தால் அப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை இந்து நிறுவனம் உள்நோக்கத்துடனே ஆதரிக்கிறது என்றுதானே அர்த்தம்?

Leave a Reply