பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோன தடுப்பு பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். காணொலி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரதமர் உடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.