டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகரம் டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ளது திமுக. மேலும், திட்டமிட்டபடி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொடு பேசினார். அப்போது, “டெல்லியில் நடந்துவரும் ஆர்ப்பாட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” என்றார்.
சென்னையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சியில் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தை, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் தலைமையேற்று நடத்தினார். அதேபோல, தமிழகம் முழுவதிலும், ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.