Home > அரசியல் > மோடிக்கு காங்கிரஸ் அனுப்பிய குடியரசுதின பரிசு!

மோடிக்கு காங்கிரஸ் அனுப்பிய குடியரசுதின பரிசு!

நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடும் போது, காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட்டிருப்பதையும், குடியரசு அந்தஸ்த்தையே பறிக்கும் பாஜகவின் குடியுரிமைச் சட்டத்தையும் பல்வேறு அறிஞர்களும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் சட்டத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ஒரு ட்வீட்டையும் காங்கிரஸ் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ரோஹன் குப்தா பதிவிட்டிருந்தார்.

“நாட்டை பிரிக்கும் வேலைக்கு இடையே நேரம் இருந்தால் அரசியல் சட்டத்தை படியுங்கள்” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். மோடிக்கு மட்டுமின்றி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரதிகள் அனுப்பப்பட்டன.

Leave a Reply