Home > செய்திகள் > விவேகானந்தர் விழாவில் பாஸ்கர சேதுபதி படம் வைக்க பிரதமர் மோடிக்கு கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை!

விவேகானந்தர் விழாவில் பாஸ்கர சேதுபதி படம் வைக்க பிரதமர் மோடிக்கு கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை!

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா  – விவேகானந்தர் விழாவில் அவருக்காக தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்து அமெரிக்கா அனுப்பிவைத் தராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் படத்தையும் வைக்க வேண்டும் என்று கொரியா தமிழ்ச் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு வேண்டுகளோ விடுக்கப்பட்டது.

கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் கொரிய பொங்கல் – 2020 நிகழ்வுகே – பயோ நிலையத்தின் அரங்கில் நடைபெற்றது . இந்த நிகழ்வுக்கு சுங்சோங் புக்தோ அரசு,  மெல்பேரி உணவகம் மற்றும் பயோகோ – ஒர்டினட் சிஸ்டெம் ஆகிய நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கினர். கொரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர், பெண்கள், குழந்தைகள் என 200 பேர்விழாவில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியாவிற்கான இந்திய துணைத்தூதர் சதிஷ்குமார்சிவன், சுங்சோங் புக்தோ மாநில அரசின் பிரதிநிதி மற்றும் மெல்பேரி- பயோ உரிமையாளர்கள் ரியூஜெகியங், இன்சொக்கிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக 26 சனவரி இந்திய குடியரசுதினம் என்பதால் கொரியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் இந்திய தேசியக் கொடியேற்றி விழாவினை தொடங்கிவைத்தார் . நிகழ்வில் கலந்துகொண்ட கொரியாவுக்கான இந்திய துணைத்தூதர், தூதரகம் மற்றும் இந்திய அரசின் சார்பில் கொரியாவில் வாழும் தமிழ்மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்ட மாதநாள் காட்டியையும் வெளியிட்டார். அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்த விஞ்ஞானிகள் இருவரை தூதர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். குறிப்பாக தூதரகம் இங்குள்ள இந்திய மக்களுக்கு செய்யும் உதவிகள் பற்றி தெரிவித்த தூதர் மே-2020 – ல் அனுசரணை வழங்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் மக்களுக்கு தெரிவித்தார்.

இந்த விழாவை சுங்சோங்புக் தோ மாநிலத்தில் நிகழ்த்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அரசின் பிரதிநிதி தமிழ் மக்களுக்கு கொரிய திருநாளான சொல்- நாள் (சந்திரவருடபிறப்பு) மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வில் குழந்தைகள் குழுவாகவும் பெற்றோருடனும் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் கிராமப் புறவிளையாட்டுகள் நடைபெற்றன.

விழாவில்கொரிய-இந்திய உறவுகளுக்கு கலாச்சார பண்பாட்டு மணம்பரப்பும் வகையில் கருத்தியல் மற்றும் செயல் முறையில் பொங்கல் திருநாளைப் போன்ற கொரியாவின் அறுவடைத் திருநாளான சுசோக் திருவிழா குறித்த காணொளி வெளியிடப்பட்டது.

கொரிய தமிழ்ச் சங்கம்- பயோகோ- ஒர்டினட்சிஸ்டெம் (Bio Co-ordinate System, Cheongcheong-buk-do Province, Korea சுங்சோங் புக்தோ மாநிலம்)  நிறுவனம் இடையே கல்வி, சுற்றுலா, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் தொழிலக உறவுக்கு பணியாற்றுதல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கு வசதியாக இந்த விழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொரிய பொங்கல் நிகழ்விற்கு வைகோ எம்.பி., பத்மஸ்ரீ தமிழிசைக் கலைஞர் முனைவர் நர்த்தகி நடராஜ், பிளாஸ்டிக் மேன் ஆப் என்று அழைக்கப்படும் பேராசிரியர் பத்மஸ்ரீ இராஜகோபாலன் வாசுதேவன், தமிழர் தொன்மை-கடல் ஆய்வாளர் ஒரிசாபாலு, மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் சிவஞானம் வசந்தன் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர்.

நிகழ்வின் முக்கிய அங்கமாக தமிழர் திருநாள் உரையாற்றிய கொரிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் சுப்பிரமணியன் இராமசுந்தரம், கொரியா- இந்திய உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும், 1987 முதல் விரிந்திருக்கும் சமகால கொரிய தமிழர் வரலாற்றை விளக்கி, தமிழர்கள் தொழில் முனைவோராக, கொரியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றும் கண்டுபிடிப்பாளர்களாக மேன்மேலும் மிளிர வேண்டியதன் தேவைப்பாடு பற்றியும் பேசினார். குறிப்பாக தமிழர்கள் இந்தியநாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பேசிய தலைவர், வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சாரமையங்கள் அனைத்திலும் விவேகானந்தர் அவர்களின் புரவலர் மன்னர் பாஸ்கர சேதுபதியின் படத்தை திறந்து வைக்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மற்றும் வெளியுறத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சிதலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறை வேற்று மாறு வேண்டினார்

பொங்கல் நிகழ்வை சங்கத்தின் அறிவுரைக் குழுவினர் முனைவர்கள் போ.கருணாகரன், செஇரத்னசிங், இரா. அச்சுதன், அ. அந்தோனிசாமி மற்றும் தா, செபக்குமார், துணைத் தலைவர் முனைவர் திருமதி கிறிஸ்ட்டி கேத்தரின், செயலர்கள்-முனைவர்கள் கு. இராமன், செ. ஆரோக்கியராஜ் மற்றும் மோ. பத்மநாபன், முதன்மை பொறுப்பாளர்லோ. ஆனந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், பிரபாகரன்,  மு. ஆனந்த்,  வே. ஜனகராஜ், மதிசரண்யா, பிரியாகுணசேகரன், சரண்யாபாரதிராஜா, மதுமிதாவாசு, தெ.விஜயலட்சுமி மற்றும் இந்திரஜித் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

You may also like
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
பிறந்தநாள் அன்று அக்காவை நினைத்து உருகிய திருமா!
பாலசுப்ரமணிக்காக உருகிய இளையராஜா

Leave a Reply