Home > முகப்பு > 69% இட ஒதுக்கீட்டு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

69% இட ஒதுக்கீட்டு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக காயத்ரி, சஞ்சனா, அகிலா, அன்னப்பூரணி உள்ளிட்ட சில மாணவிகள் சார்பாகவும் மற்ற சில பொதுநல மனுக்களாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த இடைக்கால மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பினை வழங்கி இருக்கிறார்கள். 69% இட ஒதுக்கீட்டு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள் இந்த மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை இந்த 69% இட ஒதுக்கீடு வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply