Home > முகப்பு > அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!

அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி திடீரென்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பது, அதிமுகவினரை மிரள வைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவைச் சேர்ந்த தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருகை தருகின்றனர். கொரானா காரணமாக அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், அரசு விழாவில் பங்கேற்க நவம்பர் 23ஆம் தேதி சென்னை வந்தார் உள் துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அமித் ஷா.

அவருக்கு அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் அறிவித்தார்.

இந்த நிலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று நடைபெறும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு தமிழகம் வர இருந்தார் அமித் ஷா. அப்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.இந்த நிலையில் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிப்பதற்கு அந்த கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்படி அறிவித்தால் அதிமுகவினரின் வாக்குகள் சிதறக்கூடும். அது திமுகவுக்கே சாதகமாகக்கூடும் என்று அதிமுகவுக்குள் பயம் உருவாகி இருக்கிறது. இதையடுத்தே அதிமுகவை மிரட்டுவதற்காக சிபிஐயை வைத்து அதிமுக நிர்வாகியை பாலியல் வழக்கில் கைது செய்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம் அதிமுகவினரை ஆட்டிப்படைக்கிறது என்கிறார்கள்.

You may also like
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்
சீமான் எந்த கட்சியின் பினாமி -அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

Leave a Reply