Home > அறிவியல் > பாலூட்டிகளின் தொடக்கம்!
பூமியில் பாலூட்டி இனம் மிகப்பெரியது. திமிங்கலங்கள், யானைகள், நாய்கள், வவ்வால்கள் ஏன் நாம் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொப்பூழ்கொடி உறவுடன் கூடிய பாலூட்டி விலங்குகள் உள்ளன. இந்த பாலூட்டி இனத்தின் முதல் விலங்கு எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சி நெடுங்காலமாக நீடித்து வந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம், நாம் உள்பட பாலூட்டி இனத்தின் முதல் விலங்கு சில நூறு கிராம்களே எடையுடன் கூடிய பூச்சிகளை உண்ணும் ஒரு சிறிய பிராணிதான் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். பூமியில் டினோசர்கள் அழிந்தபிறகு உருவான உயிரினம் இது. பாலூட்டி விலங்குகள் என்றாலும் அவை முட்டையிட்டு குட்டிகளை ஈனும் விலங்குகளாக இருந்த காலம் உண்டு. ப்ளாட்டிபஸ் எனப்படும் வாத்தலகி, கங்காரு போன்றவை அவற்றில் சில. ஆனால், தொப்பூழ்கொடியுடன் குட்டி ஈனும் விலங்கு வகையில் முதல் இனம் இதுதான். ஆறு ஆண்டுகள் ஆயிரக்கணக்கான ஆய்வுகளை நடத்தி இதை நிறுவியிருக்கிறார்கள். டினோசர்கள் அழிந்த காலகட்டத்தை அடுத்து இரண்டு லட்சம் ஆண்டுகள் கழித்து இந்த சிறிய விலங்கு தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply