Home > முகப்பு > டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்!

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்!

டெல்லி செங்கோட்டையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அங்குள்ள கொடிக்கம்பத்தில் தங்கள் கொடிகளை ஏற்றினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக டெல்லி செங்கோட்டையை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை செங்கோட்டையிலிருந்து மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செங்கோட்டையில் இருந்த கோபுரம் மீது சிறிய கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியேற்றினர். வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் கம்பத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டன. அத்துடன் டெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்று டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

You may also like
போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்மனம் கொண்ட மோடிக்கு காலம் பதில் சொல்லியே தீரும்!
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை

Leave a Reply