Home > கட்டுரைகள் > அஸ்பக்குல்லா கான் (அக்டோபர் 22, 1900 – டிசம்பர் 19,1927)-freedom fighters

அஸ்பக்குல்லா கான் (அக்டோபர் 22, 1900 – டிசம்பர் 19,1927)-freedom fighters

நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான தியாகிகளில் ஒருவர் அஸ்பக்குல்லா கான். உத்திரப்பிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் மாநிலம் 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் பிறந்தார். அவரது தந்தை பெயர் சதிகுல்லா கான். 1922ல் அஸ்பக்குல்லா கான் புரட்சியாளர்களின் குழுவில் இணைந்தார்.

பிரிட்டிஷாரின் நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்யும் தீர்மானத்தோடு இவர்கள் போராடினர். ஒரு ஒழுக்கநெறி மிகுந்த வீரனாக, கக்கோரி எனுமிடத்தில் பிரிட்டிஷ் ரயிலில் கொள்ளையடிக்கும் போராட்டத்தை திட்டமிட்ட புரட்சியாளர்களோடு தன்னை இணைத்துக் கொண்டான் அஸ்பக்குல்லா.

1925 ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி ஷாஜகான்பூரிலிருந்து லக்னோ நோக்கிச் செல்லும் ரயில் கக்கோரியை நெருங்கிக் கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த அஸ்பக்குல்லா தனது நண்பர்களோடு ரயில் காப்பாளரின் பெட்டிக்குள் நுழைந்தான்: அங்கிருந்த பணப்பைகளை எடுத்து வெளியே எறிந்தது புரட்சியாளர்கள் குழு. இந்த கக்கோரி கொள்ளைக்குப் பிறகு பல்வேறு தலைமறைவாக இருந்த அஸ்பக்குல்லா, கடைசியில் டில்லியை அடைந்தான். அங்கு பணத்தாசை பிடித்த ஒருவரால் பிரிட்டிஷ் போலிஸாரிடம் காட்டிக்கொடுக்கப்பட்டார். போலிஸ் கைது செய்தது. 1927 டிசம்பர் 19ஆம் தேதி பைசாபாத் சிறையில் அஸ்பக்குல்லா கான் தூக்கிலிடப்பட்டார்.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply