Home > அறிவியல் > சிதைந்த ஓவியங்களை முழுமையாக்கும் டெக்னிக்!

சிதைந்த ஓவியங்களை முழுமையாக்கும் டெக்னிக்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதன் வரைந்த ஏராளமான ஓவியங்கள் உலகம் முழுவதும் கிடைத்துள்ளன. ஆனால் அந்த ஓவியங்கள் வரையப்பட்ட காலத்தில் இருந்ததைப் போல முழுமையாக இல்லை. வண்ணம் சிதைந்து, முழுமை இழந்து காணப்படுகின்றன.

அப்படிப்பட்ட புராதன ஓவியங்களை அவை வரையப்பட்ட காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படியே காண புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு மல்டி இல்லுமினேஷன் ஹைபர்ஸ்பெக்ட்ரல் எக்ஸ்ட்ராக்‌ஷன் (எம்எச்எக்ஸ்) multi-illumination hyperspectral extraction (MHX) என்று பெயர். இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, டஜன் கணக்கான ஓவியங்களை சோதனை செய்தார்கள். அகச்சிவப்பு, புறஊதா கதிர் கற்றைகள் உதவியோடு இவற்றை பார்க்கும்போது காலத்தால் சிதைந்த அவற்றின் முழு வடிவம் புலப்பட்டது என்கிறார்கள்.

படத்தில் எட்ரூஸ்கன் நாகரிகத்தில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் குரங்குக் கல்லறை எனப்படும் ஓவியத்தின் சிதைந்த வடிவத்தையும் ஒரிஜினல் வடிவத்தையும் பார்க்கமுடியும்.

Leave a Reply