Home > அரசியல் > தம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1

தம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1

இடம்: சவூதி அரேபியா, கிழக்கு மாகாணம்.

ரெண்டு வருடத்துக்கு முன்பு. நான் எங்க கம்பெனி சைட்ல இருந்தப்போ, நாகரீகமா ட்ரெஸ் போட்ருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் என்னய பாக்க வந்தாரு. இங்கே ஏதோ கம்பெனிக்கு ஒன்றரை வருடத்துக்கு முன்னாடி ட்ரைவர் வேலைக்கு வந்தாராம். இவருடைய தவறால் ஏற்பட்ட விபத்துக்கு உரிய இழப்பீட்டை இவருடைய சம்பளத்தில் பிடித்தார்களாம். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த இழப்பீட்டு பிரச்சினையை தீர்த்துவிட்டு ஊருக்கு போய்விடுவேன் என்றும் சொன்னார். எனவே ஐந்து மாதங்களாக ஒழுங்கான சம்பளம் கிடைக்கவில்லை என்றும், தனக்கான ஓய்வு நேரத்தில் செய்வதற்கு தகுதியான ஏதாவது வேலை இருந்தால் தாங்கனும் கேட்டாரு.

அவரு நெலமை புரிஞ்சது. எங்க சைட் க்ளீனிங் பாக்கி இருந்துச்சு. அந்த வேலையை 10 நாளுக்குள் முடிச்சு குடுத்தா அதற்கான ஒரு தொகையை தர்ரேன்னு சொன்னேன். ஒத்துக்கிட்டாரு. கொஞ்சம் முன்பணம் குடுத்தேன். சொன்னபடி டயத்துக்குள்ள வேலையை முடிச்சிட்டு, போன் பண்ணாரு. பாலன்ஸ் பணத்தை குடுக்க போனபோது அவர்ட்ட கொஞ்சம் அரசியல் சம்பந்தமா பேச ஆரம்பிச்சோம்.

அதிபரின் அதே கர்ஜனை, அதே கிருக்குத்தனம், அதே திமுக எதிர்ப்பு, அதே அதே அதே ….அவர் தம்பி வகையறானு முடிவாயிருச்சு.

ஒரு கட்டத்துல நபிகள் நாயகம், நபிகள் நாயகம்னு பேசுனாரு. நபிகள் நாயகத்தின் பேரு என்னனு கேட்டேன். நபிகள் நாயகம்கிறதே அவரோட பேர்தான். பேருக்கு எப்படி விளக்கம் சொல்ல முடியும்னு திருப்பி கேட்டாரு.

அட மூதேவி… நபி அப்டீனா தமிழ்ல தீர்க்கதரிசினு அர்த்தம். நாயகம் அப்டீனா சிறப்பானவர் அல்லது முதன்மையானவர்னு அர்த்தம். மொத்தத்துல நபிகள் நாயகம்னா, தீர்க்கதரிசிகளில் சிறப்பானவர்னு அர்த்தம். அவர் பெயர் ‘முகம்மது’ அப்டீனு சொன்னேன். இந்த திமுக காரங்களே இப்டிதான், எல்லாத்துக்கும் வெதண்டாவாதம் பேசுவீங்கனு சொல்லீட்டு கோவமா போய்ட்டான். மறுபடி நான் பலதடவை போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை.

இதுல முக்கியமான ரெண்டு விசயம் உண்டு. ஒன்னு அந்த தம்பி – இஸ்லாமியன். இன்னொன்னு தம்பி பேரு – முகம்மது.

நாதக என்பது கிருக்கர்களின் கூடாரம்.

-Arulraj

You may also like
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.
வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றிவிடுவார்களா?

Leave a Reply