Home > கட்டுரைகள் > அன்று அவன் சுட்டிருந்தால் ராணி எலிசபெத் செத்திருப்பார்…!

அன்று அவன் சுட்டிருந்தால் ராணி எலிசபெத் செத்திருப்பார்…!

பல ஆண்டுகளுக்குமுன் ராணி இரண்டாம் எலிசபெத், அதிகாலை அரண்மனை தோட்டத்தில், நடைப்பயிற்சி செய்யும்போது அவருடைய காவலர் ஒருவர், அன்னியர் என நினைத்து சுட இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 91 வயதாகும் இரண்டாம் எலிசபெத் அடிக்கடி பக்கிங்ஹாம் அரண்மை தோட்டத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இரவில் தூக்கம் வராவிட்டால் தோட்டத்தில் நடக்கச் சென்றுவிடுவார். அப்படி ஒருமுறை அதிகாலை 3 மணி அளவில் அரண்மனை தோட்டத்தில் நடைப்பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்த சமயம் அவருடைய பாதுகாவலர் ஒருவர் அவரை சுட இருந்ததாக தெரியவந்துள்ளது. அன்னியர் யாரோ தோட்டத்தில் உலவுவதுபோல நினைத்து பாதுகாவலர் துப்பாக்கியுடன் விரைந்துவந்தார். ராணி என்று தெரிந்தவுடன் பதறினார்… “நல்லவேளை தப்பித்தீர்கள். கொஞ்சம் தவறியிருந்தால் உங்களை சுட்டிருப்பேன்” என்று ராணியிடம் கூறினார். “பரவாயில்லை” என்று ராணி அமைதியாக கூறினார். பின்னர், “அடுத்தமுறை இதுபோல நடக்கத்தோன்றினால் உங்களுக்கு தகவல் சொல்கிறேன்” என்றார். ராணி மட்டுமல்ல ராணியின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ 2013ம் ஆண்டில் இதேபோல பாதுகாவலர் ஒருவருடன் வாக்குவாதம் செய்ய நேர்ந்தது என்று தி டைம்ஸ் இதழ் எழுதி இருந்தது.

Leave a Reply