Home > சினிமா > நான் ஒரு மொரட்டு சிங்கிள்! அடா ஷர்மா பளிச்

நான் ஒரு மொரட்டு சிங்கிள்! அடா ஷர்மா பளிச்

டான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக் கூடியவர் நடிகை அடா ஷர்மா. பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து பெயரெடுத்தவர். பாலிவுட்டில் வித்யுத் ஜம்வால் நடிப்பில் உருவாகி வரும் கம்மாண்டோ-3 படத்தின் நாயகியாக இப்போது நடித்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கலக்கி இருக்கிறார் அடா ஷர்மா. சண்டைக் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். அதை ட்ரெய்லரிலேயே பார்க்க முடிந்தது.

கமாண்டோ-3 படம், தற்காப்புக் கலைகள் குறித்தெல்லாம் மனம்திறக்கும் அடா, “சிறுவயதில் இருந்தே டான்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்கில் அதிக ஆர்வம் காட்டுவேன். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விஷயங்கள்தான். டைமிங், கவனமாக இருப்பது, எல்லைகள், ஒழுக்கம் என்று எல்லாமே இரண்டிலுமே இருக்கும். எனக்கு கதக் நடனமும், களறிபயட்டு என்கிற தற்காப்புக் கலையையும் கற்றுத் தந்தது என் அம்மாதான். அவர்தான் என்னுடைய ரோல்-மாடல். கமாண்டோ படத்துக்காக நான் களறிபயட்டு கலையை இன்னும் அதிகமாக கற்றுக்கொண்டேன். தமிழ்நாட்டில் உதயமான சிலம்பாட்டமும் செய்யவேண்டி இருந்தது. அதோடு, துப்பாக்கியை வைத்து பல ட்ரிக்ஸ்களை கற்றேன். அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியும். ஒருவகையில் துப்பாக்கி சுடுவது தியானம் செய்வதற்கு சமமானது.

இந்தப் படத்தின் நாயகன் வித்யுத்தின் உடல்கட்டு மற்றும் அவரது தற்காப்புக் கலைகளைப் பார்த்து நான் நிறையவே வியந்திருக்கிறேன். குறிப்பாக, அவர் தனது உடலோடு மனதையும் ஒருமுகப் படுத்தி, பல விஷயங்களைச் செய்கிறார். பாட்டில்களை தரையில் அடுக்கி, அதில் தண்டால் எடுப்பார். சாதாரண நபர் அப்படிச் செய்தால், நிச்சயம் அது உடைந்து காயத்தை ஏற்படுத்தும். ஆனால், வித்யுத் தன் உடலை பட்டுப்போல மென்மையாக்கி சுலபமாக செய்கிறார். அதற்கு நிறைய பயிற்சி வேண்டும் என்றார்.

உங்களை ஒரு தொழிலதிபரோடு வைத்து கிசுகிசுக்கிறார்களே. அது உண்மையான தகவல்தானா? என்ற கேள்விக்கு, ஆச்சர்யமாக முகத்தை வைத்தபடி பதில்சொல்லும் அடா, “அப்படியா… யாரந்த தொழிலதிபர்? நான் ஒரு முரட்டு சிங்கிள். என் ரசிகர்கள்தான் எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துத் தரவேண்டும். என்னை மணக்கப் போகிறவர் வட்டமாக தோசை சுட்டு, அதற்கு பக்காவான சுவைகொண்ட சட்னி செய்து தரக்கூடிய நபராக இருக்கவேண்டும். அவர் விலங்குகள் மீது அன்பு காட்டுபவராக இருக்கவேண்டும். பின் பக்கமாக டைவ் அடிப்பவராக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மகிழ்ச்சியை விரும்புவராக இருக்கவேண்டும் என்று பெரிய லிஸ்டையே அடுக்கிவிட்டார்.

You may also like
சினிமா படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்கும் லாபம் படக்குழு
ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி காலமானார்
அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி
திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!

Leave a Reply