Home > அரசியல் > காலத்தே கவிஞர் கனிமொழி செய்த உதவி..!

காலத்தே கவிஞர் கனிமொழி செய்த உதவி..!

துபாய் கலீஸ் டைம் பத்திரிக்கையில் கடந்த 14 ந் தேதி ஒரு செய்தி வெளியானது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்தியர் ஒருவர் வேலையை இழந்ததுடன்,  8 மாத கர்ப்பிணி மனைவியுடன்  தமிழகம் திரும்ப வழியில்லாமல் துபாயில் தவிப்பதாக அந்தச் செய்தி தெரிவித்தது. இதையறிந்த அமீரக தி.மு.க.இளைஞர் அணிச் செயலாளர் பிரபு அமீரக தி.மு.க. அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானிடம் கூறினார். அதைத்தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி.யிடம் மீரான் பேசினார். அப்போது, அந்த தம்பதியின் தற்போதைய நிலைமையையும்,வந்தே பாரத் மிஷன் 2 ல் தமிழகத்திற்கு நேரடி விமான சேவை இல்லாததையும் தெரிவித்து, அவர்களுக்கு உதவிசெய்யும்படி கேட்டுக்கொண்டார். இதைக்கேட்ட கனிமொழி, அந்த தம்பதிக்கு உடனடியாக உதவ முன்வந்தார். தமிழ்நாட்டுக்கு விமானம் இல்லாத நிலையில், அந்தத் தம்பதி, வந்தே பாரத் மிஷன் 2 ல் 17-05-2020 மாலை கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு வரும்படி கூறினார்.. அதன்படி, கொச்சி வந்த அவர்களை, கொச்சி முதல் மதுரை வரை  பத்திரமாக கொண்டு சேர்க்க தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆம்புலன்சில் கனிமொழியின் உதவியாளர் சரவணன்,பாலமுருகன் ஆகியோரை அனுப்பி வைத்தார். அதன்பின்னரும், ஞாயிறு இரவு 7 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணிவரை அந்தத் தம்பதி மதுரையில் உள்ள தங்கள் இல்லத்திற்கு சென்றடையும் வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் பயணம் பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்தார். 18-05-2020 திங்கள் கிழமை காலை மதுரை கூடல் நகரில் உள்ள அவர்கள் இல்லத்தை பத்திரமாக அடைந்தனர். தகவலைக் கேட்டறிந்த கனிமொழி, அந்த கர்ப்பிணி பெண் நல்லபடியாக குழந்தையை பிரசவிக்க வாழ்த்துக்களை தெரிவித்தார். தனது மகனையும் மருமகளையும் பத்திரமாக அழைத்து வந்ததற்கு கனிமொழி எம்.பி.க்கும் அமீரக தி.மு.க அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான், இளைஞர் அணிச் செயலாளர் பிரபு, சரவணன், பாலமுருகன் ஆகியோருக்கும் தம்பதியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

You may also like
சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!
திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

Leave a Reply