Home > முகப்பு > இறுதியாண்டு தேர்வில் முறைகேடு

இறுதியாண்டு தேர்வில் முறைகேடு

நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம் இறுதியாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வை செப்.24 முதல் செப்.29 வரை ஆன்லைனில் நடத்திய தேர்வை 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். முறைகேடாக தேர்வு எழுதியது தொழில்நுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 3,000 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் வீடியோவை ஆய்வு செய்யும் குழுவின் முடிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா காரணமாக இறுதியாண்டு தவிர்த்து மற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே அரியர் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில் தற்போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You may also like
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம்
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

Leave a Reply