Home > முகப்பு > தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , சேலம், கோவை , நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வால்பாறையில் 11 செமீ, சின்னக்கல்லாரில் 9 செமீ, சோலையார், நடுவட்டத்தில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா,கர்நாடகா, கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோரத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

You may also like
தமிழகம் முழுவதும் மஞ்சள் அலர்ட்
தமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் முழுவதும் மஞ்சள் அலர்ட்
சென்னையில் கனமழை
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Leave a Reply