Home > அரசியல் > அதிமுகவை பாஜக விழுங்கப் போவதை அதிமுக தொண்டனுக்கு உணர்த்துவது முக்கியம்!

அதிமுகவை பாஜக விழுங்கப் போவதை அதிமுக தொண்டனுக்கு உணர்த்துவது முக்கியம்!

Attention seeking “அறிவுசீவிகளுக்கு” திமுகவினர் ஒதுக்கும் நேரத்தை உண்மையான அதிமுக கட்சிக்காரர்களுக்கு அவர்களின் கட்சி அடமானம் வைக்கப்பட்டு தேர்தலுக்குப்பின் அந்த கட்சி மொத்தமாய் அபகரிக்கப்படப்படப்போகிறது என்கிற ஆபத்தை உணரச்செய்தால் அதுவே உண்மையான அரசியல் களப்பணியாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு பயன்படக்கூடிய பொதுத்தொண்டாகவும் இருக்கும். தமிழ்நாட்டின் ஆனப்பெரிய அறிவுசீவிகளைவிட அதிமுகவின் அடிமட்டத்தொண்டன் மேம்பட்டவன் — அறிவுநாணய அளவுகோளில்.

அறிவுநாணயமற்ற சுயமோகிகளின் அரசியல் உளறல்கள் அடிப்படையில் அரைவேக்காட்டுத்தனம். உண்மையில் எப்போதும் தன்மீதான கவன ஈர்ப்புகோரும் பரிதாப தீராதன்னிரக்கத்தின் இன்னொரு வெளிப்பாடு. அதற்கெல்லாம் பதில் சொல்லி மாளாது.

அறிவுநாணயத்துக்கு பெரியாரை விட இன்னொருவர் இந்த தமிழ்மண்ணில் உதாரணம் காட்டமுடியாது. அவரது ஒட்டுமொத்த வாழ்வின் அரசியல் அளவுகோளுமே குறிப்பிட்ட சமயத்தில் தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் எது நன்மை என்று மட்டுமே பார்த்தார் என்பது தான். அதனால் தான் காங்கிரஸை அழிப்பேன் என சபதம்போட்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறியவர் அதே காங்கிரஸைச்சேர்ந்த காமராஜரை விழுந்து விழுந்து ஆதரித்தார். பச்சைத்தமிழர் என்கிற பட்டம் கொடுத்தார். தான் கடுமையாய் எதிர்த்த திமுக ஆட்சிக்குவந்து அந்த ஆட்சியை தனக்கு அர்ப்பணித்த அண்ணாவை ஏற்று அவரை ஆதரித்தார். அவருக்குப்பின் கலைஞரை ஆதரித்தார்.

இவையெல்லாம் மேலுக்கு ஒன்றுக்கொன்று முரணாகத்தோன்றலாம். ஆனால் அதில் ஒரு தொடர்ச்சி இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட தேர்தலில் யாரால் அதிக நன்மை விளையும் தீமைகள் குறையும் என்று அவர் நம்பினாரோ அவர்களை ஆதரித்தார். அவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்வார்கள் என்கிற நொட்டாரம் பேசி தன்னை புனிதனாக்கிக்கொள்ள பெரியார் ஒருநாளும் முயலவில்லை. ஏனெனில் அவர் பெரியார். மற்றவர்கள்? … அதை எதுக்கு என்வாயால் சொல்ல?

எனவே இருக்கும் மிகச்சிலநாட்களை திமுககாரர்கள் உருப்படியாக பயன்படுத்தப்பாருங்கள். சுயமோக அரிப்புகளுக்கு சொறிந்துகொடுத்து நேரத்தை விரயமாக்காதீர்கள். அவர்கள் யாரும் எதையும் தெரியாமல் செய்யவில்லை. நீங்கள் சுட்டிக்காட்டியதும் தம்மை திருத்திக்கொள்ள. தாங்கள் அனைத்தும் அறிந்த, தவறே செய்யாத புனிதர்கள் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது பொதுவில் சொல்லிக்காட்டி பீத்திக்கொள்வதில் ஒரு கிளுகிளுப்பு.

அதற்கு இந்த புதிய புத்தர்களுக்கு ஒரு நிரந்தர பாவி தேவை. அது தமிழ்நாட்டில் திமுகவாக இருக்கிறது என்பது தான் கடந்த 60 ஆண்டு அரசியல் பெருஞ்சோகம். அதற்கு உண்மையான காரணம் அது இந்த eliteகளின் பார்வையில் “பலபட்றைகளுக்கும்” தமிழக அரசியல் அதிகாரத்தை சாத்தியமாக்கியது என்கிற மேல்தட்டு, மேல்ஜாதி தூய்மைவாத அறிவுசீவிகளின் அந்தரங்க கோபம் என்பதே அவர்களின் சுயமோக புனித ஆத்மாக்கள் மட்டும் உலவும் கற்பனா லோகத்தின் சூழல்.

எனவே திமுகவினர் இந்த தேர்தலில் வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். மகாபாரத கதையில் இருந்தே ஷிகண்டிகளின் ஒரே நோக்கம் போரில் வீரனின் கவனத்தை சிதைத்து அதை தன்மீது திருப்பி எதிரிக்கு துணைபோவது மட்டுமே. பொறுப்புள்ள போர்வீரன் ஷிகண்டிகளை பொருட்படுத்த மாட்டான். முன்னுள்ள போரில் கவனம் செலுத்துவான். எதிரியையே வீழ்த்துவதே முதன்மை இலக்கு. அதில் மட்டுமே முழுமையாய் கவனம் குவியுங்கள்.

ஷிகண்டிகள் காத்திருக்கட்டும். காக்க வையுங்கள். அவர்கள் மிகவும் கோரும் கவனத்தை அவர்களுக்கு நீங்கள் கொடுக்காமல் தவிர்ப்பதே அவர்களுக்கு ஆனப்பெரிய தண்டனை. அது உங்களைவிட அந்த ஷிகண்டிகளுக்கு நன்றாக தெரியும். Silence is a powerful weapon. Try to use it where it’s necessary.

LR Jagadheesan

You may also like
ஜெயக்குமாரை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம்..!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் : வரலாறு படைத்தது மு.க.ஸ்டாலின் அரசு!!
சீமான் தம்பிகளுக்கு புத்தி எப்போ வரும்? – Arulraj

Leave a Reply